அவசர அவசரமாக ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தொடங்க முடியாது! அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !
தமிழகத்தில் டிக்கெட் விற்பனை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரிய திரை நடிகர்களின் படங்களின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விரைவில் தமிழக திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து இருந்தார்.
கடம்பூர் ராஜு அண்மையில் அளித்த பேட்டியில், ஆன்லைன் டிக்கெட் விற்பனையை உடனடியாக அவசர அவசரமாக அமல்படுத்த முடியாது. விரைவில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புது திரைப்படங்கள் இணையத்தில் வருவதை தடுக்க தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டியளித்தார்.