விஜய் ஹசாரே போட்டி: வெளுத்து வாங்கிய கே.எல்.ராகுல், விஜய் சங்கர்..!
விஜய் ஹசாரேஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த போட்டியில் கர்நாடகா , கேரளா அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 294 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 131 ரன்கள் எடுத்தார்.
கேரளா அணியில் பசில் தம்பி ,கே.எம் ஆசிப் இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர். பின்னர் இறங்கி கேரளா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 104 ரன்கள் எடுத்தார். கர்நாடகா அணியில் ரோனிட் மோர் 3 விக்கெட்டை பறித்தார்.
மற்றொரு போட்டியில் தமிழக அணியும் , பீகார் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய பீகார் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபுல் குமார் 110 ரன்கள் அடித்தார். தமிழக அணியில் முகமது 3 விக்கெட்டை பறித்தார்.
பின்னர் களமிறங்கிய தமிழக அணி 46.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விஜய்சங்கர் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.இதனால் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.