தொழில் பொறாமையில் கணவனை மகன் ,மருமகனை வைத்து கொன்ற கொடூர மனைவி ..!

Default Image

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். மீனவரான இவர் மேடை அலங்காரம் கடை நடத்தி வருகிறார். இவருக்கும்  விஜயலட்சுமி என்பவருக்கும் 22 வருடம் முன் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும் , வருண் , விமல் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இதையடுத்து கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 வருடத்திற்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் தனது பிள்ளைகளை கொண்டு தனியே விஜயலட்சுமி வசித்து வருகிறார். விஜயலட்சுமி தன் கணவனைப் போலவே மேடை அலங்காரம் கடையை நடத்தி வருகிறார்.

விஜயலட்சுமி புதிதாக தொடங்கிய தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவனின் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி உள்ளார். இந்த சம்பவத்தை செய்தது தன் குடும்பத்தார்கள் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஆவணி மாதம் மதியழகனுக்கு 1.15 லட்சத்திற்கு மேல் ஆர்டர் வந்துள்ளது.

ஆனால் விஜயலட்சுமி ஒரு ஆர்டர் கூட வராததால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவனை கொல்ல திட்டம் தீட்டினார். இதனால் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு இரு சக்கரத்தில் மதியழகன் சென்றுள்ளார். அடுத்த மறுநாள் காலையில் வெள்ளகோவில் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மதியழகன் தாய் வள்ளியம்மை என் மகனை விஜயலட்சுமி தான் கொன்றிருக்க முடியும் என போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமி மற்றும் அவரது இளைய மகன் விமல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது.

தனது வாழ்க்கை விட்டு சென்று விட்ட மதியழகன் தொழிலிலும் போட்டியாக வருவதை  விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் இளைய மகனிடம் இரும்புக்கம்பி கொடுத்து விஜயலட்சுமி கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி விமல் மற்றும் விஜயலட்சுமி அண்ணன் மகன் சத்ரியன் இருவரும் சென்று உள்ளனர்.

சத்ரியன் வாகனம் ஓட்ட விமல் பின்னால் அமர்ந்து கொண்டு முகத்தை மூடிக்கொண்டு மதியழகனை பின்தொடர்ந்து சென்று உள்ளார். ஆள் இல்லாத இடத்தை பயன்படுத்திக் கொண்ட விமல், தந்தை மதியழகனின் பின்னால் தாக்கியுள்ளார்.

நிலை தடுமாறி விழுந்த மதியழகனை விமல் இரும்பு கம்பியால் முகத்தை தாக்கி உள்ளார். பிறகு மதியழகன் இறந்ததை உறுதிசெய்த  பின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk