சண்டைக் காட்சிக்காக தீவிர பயிற்சியை மேற்கொள்ளும் ஸ்ருதிஹாசன் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல நடிகரான கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் “ஏழாம் அறிவு” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன் பின் தனுஷ் நடித்த “3” படத்திலும் நடித்திருக்கிறார். இவர் அஜித், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற மிகப்பெரிய பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் “டிரேட்ஸ்டோன்” என்ற அமெரிக்க டீவி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீீரியலில், நிரா படேல் என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதால், ஸ்ருதி ஹாசன் சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்ற செய்தி அறியவந்துள்ளது.