பயிற்சி போட்டியில் டக் அவுட் ஆன கேப்டன் ஹிட் மேன்..!
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 போட்டி டிராவில் முடிந்தது.இதை தொடர்ந்து வருகின்ற 2-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.
இதற்காக மூன்று நாள் பயிற்சி போட்டி ஆந்திராவிலுள்ள விஜயநகரத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் முதல் போட்டி ரத்தானது. ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாளான நேற்று போட்டி தாமதமாக தொடங்கியது.
முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 64 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் சதமும் , பவுமா 87 ரன்கள் விளாசினார். இதைத் தொடர்ந்து இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் இறங்கினர்.
ஆனால் களமிறங்கிய இரண்டு பந்திலே ரோகித் சர்மா ஒரு ரன்கள் கூட எடுக்காமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறங்கிய ஈஸ்வரன் 13 ரன்னில் வெளியேற இந்திய அணி தற்போது 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் மாயங்க் அகர்வால் 26 ரன்னும் ,பிரியங்க் பஞ்சால் 25 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.
மேலும் பயிற்சி போட்டிக்கு கேப்டனாக ரோஹித் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.