மீண்டும் பாஜகவில் நடிகை விஜயசாந்தி! மஹாராஷ்டிரா தேர்தலுக்கு நட்சித்திர பேச்சாளராக களம் காண்கிறார்!

Default Image

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.

பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.

அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பிஜேபியில் சேர்வதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பிஜேபி தேசிய செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் அக்டோபர் 8ம் தேதி பிஜேபியில் சேர்ந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக இருப்பதால், வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக பிஜேபி சார்பில் களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu