”யாதும் ஊரே! யாவரும் கேளிர்! புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசிய பிரதமர் மோடி

Default Image

கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில்,ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து வருகிறோம்.தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும்.

ஊரக பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டம்.எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.

கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசினார்.அவர் பேசுகையில்,  யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது.எங்களுக்கென தனியாக கலை, கலாச்சாரம் இருக்கிறது.புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் தீட்டி இருக்கிறோம். உலக வெப்பமயமாதலை தடுப்பதை நினைவில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.தீவிரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம், அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் .தீவிரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவளித்து, எங்களை காயப்படுத்தி வருகின்றன என்று பேசினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்