biggboss 3: எனக்கு பைனல்சுக்கு போகணும்னு ஆசை இல்லை!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில், நாளுக்குநாள் பலவிதமான சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கலங்க செய்துள்ளது. இவரது பிரிவை தாங்க முடியாமல் நீங்கா துயரினால், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் லொஸ்லியா. இவரிடம் தர்சன் ஆறுதலான வார்த்தைகளை பேசி அவரை ஆறுதல் படுத்துகிறார். ஆனால், அவர் அதையும் தாண்டி கலங்குகிறார்.
மேலும் அவர் அழுதுக்கொண்டே, அவன் பைனலுக்கு போக வேண்டியவன் என்றும், தனக்கு பைனலுக்கு போக ஆசை இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் தனது அப்பா, அம்மாவுக்காக தான் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
#Day96 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TszkaT6I0A
— Vijay Television (@vijaytelevision) September 27, 2019