10 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் களமிறங்கி உள்ள இலங்கை..!
பாகிஸ்தானில் இலங்கை அணிசுற்று பயணம் செய்து கடந்த 2009-ம் ஆண்டு விளையாடினார். அப்போது சில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் இறந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் சர்வதேச போட்டியில் விளையாட மாட்டோம் என மற்ற அணிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை அணி 10 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து இன்று முதல் ஒருநாள் போட்டியை கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி முற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.