நீட் ஆள்மாறாட்டம் உண்மையை ஒப்புக்கொண்ட உதித்சூர்யாவின் தந்தை !
மருத்துவ படிப்பிற்கு தகுதி தேர்வாக கருதப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உதித்சூர்யா என்ற மாணவன் சேர்ந்துள்ளார் என புகார் எழுந்தது. இதனால் உதித்சூர்யா குடும்பத்தோடு தலைமறைவாகியதால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் உதித்சூர்யா நேற்று குடும்பத்தோடு திருப்பதியில் கைது செய்யப்பட்ட பின் உதித்சூரியாவை குடும்பத்தோடு இரவு 2 மணிக்கு தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை டாக்டராக்கியே வேண்டும் என்ற ஆசையில் இப்படி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி அறிவித்துள்ளனர்.