சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்ககோரி போராட்டம்…!!
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்காவிட்டால் வரி செலுத்த மாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அந்த தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1967 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தனித் தொகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.