தலைமைக்காவலர் மகளிடம் 16 சவரன் நகை திருட்டு ! தலைமறைவான நபரை பிடித்த காவல்துறை !

Default Image

சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர், சசிகுமார். இவர் கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி என்ற திருமண மண்டபத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர் மகளின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகை காணாமல் போயின.

இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் அவரது மகளிடம் மர்ம நபர் ஒருவர் பேசிக்கொண்டே, அவளின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வேலூருக்கு சென்ற தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்த நபரை கண்டுபிடித்தனர். அவர் வேலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருமண மண்டபங்களில் குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும், அவர் மீது 7 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.அவரிடமிருந்த 16 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். விசாரணைக்குப் பின்னர், அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்