கடக ராசிக்காரர்களுக்கு இந்த வரம் எப்படி ?
கடக ராசிக்காரர்களே!
இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி உண்டாகும். பெண்கள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்வாதிகளிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மாணவர்கள் பதற்றம் கொள்ளாமல் நிதானமாகப் பாடங்களைப் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 3
பரிகாரம்: காளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனஅமைதி பிறக்கும்.
source: dinasuvadu.com