தித்திக்கும் சுவையில் கெட்டியான நேந்திர பழம் பாயசம் செய்வது எப்படி ?
நேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த நேந்திரம் பழம் -2
தேங்காய் -1
தேங்காய் துண்டுகள் – சிறுது சிறிது நறுக்கியது 2 ஸ்பூன்
துருவிய வெல்லம் -1 1/2 கப்
முந்திரி -தேவையான அளவு
திராட்சை-தேவையான அளவு
நெய் -2 தேக்கரண்டி
பொடித்த பச்சரிசி -2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக முதல் பால் ,இரண்டாம் பால் என பிரித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துண்டுகள் , முந்திரி , திராட்சை முதலியவற்றை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அதில் நேந்திரம் பழத்தையும் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டாம் தேங்காய் பால் மற்றும் பச்சரிசியை சேர்த்து கெட்டியாகவும் வரை கொதிக்க விடவும். பின்பு கெட்டியானவுடன் அதில் துருவிய வெல்லத்தை சேர்க்கவும்.இப்போது கெட்டியான முதல் பால் மற்றும் நேந்திரம் பழம் சேர்க்கவும். பின்பு வறுத்து வாய்த்த தேங்காய் துண்டுகள் ,முந்திரி ,திராட்சை முதலியவற்றை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.