சிரஞ்சீவி – விஜய் சேதுபதி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாவது மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

Default Image

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் சாமியின் மிரட்டலான குரல் என ஏற்கனவே முதல் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

தற்போது இந்த படம் ரிலீஸ் நெருங்கும் வேளையில் முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த இரண்டாவது ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
p chidambaram health
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay