மதுமிதா தாலியை கழற்றியதற்கு இது தான் காரணமாம்!
நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மதுமிதா தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்தது பலரின் சர்ச்சைபேச்சிற்கு உள்ளானது.
இது குறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருள்களை செக் செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்று கூறியதாக கூறியுள்ளார்.
தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் டாஸ்க் செய்யும் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்கள். இதுகுறித்து தனது அவர் கணவரிடம் கேட்க அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.