இந்தோனிசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சென்றாண்டு போல நிகழுமோ என மக்கள் பீதி!
இந்தோனிசியாவில் இன்று நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவு என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மூலம் ஏற்பட்ட சேதத்தை இன்னும் கணக்கிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம், மாலுகு மாகாணத்தில் உணரப்பட்டுள்ளது. இதே போல சென்றாண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாக இருந்தது. இதனை தொடர்ந்து வந்த சுனாமியால் 4,300 பேர் இறந்துவிட்டனர்.
அதே நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என மக்ககள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை 8.46க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆக்கியவை இன்னும் கணக்கிடப்படவில்லை.