நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இன்று உதித் சூர்யாவிடம் விசாரணை
தேனி சிபிசிஐடியினர் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மாணவர் சூர்யா மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் உதித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவல்த்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.இதனை தொடர்ந்து திருப்பதியில் வைத்து உதித் சூர்யா அவரது தாய் மற்றும் தந்தையை தனிப்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் சிபிசிஐடியிடம் உதித் சூர்யா அவரது தாய் மற்றும் தந்தையை ஒப்படைத்தனர். இந்த நிலையில் தேனி சிபிசிஐடியினர் அவர்களிடம விசாரணை நடத்த உள்ளனர்.