மக்களே நன்றி! நேர்கொண்ட பார்வை நிமிர்ந்து நடைபோடுகின்றது! பிக்பாஸ் பிரபலத்தின் அட்டகாசமான பதிவு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் பிரபலமான அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இறைவனுக்கும் மக்களுக்கும் நன்றி கூறி, நேர்கொண்ட பார்வை 50 நாட்களை கடந்து நிமிர்ந்து நடைபோடுவதாக கூறியுள்ளார்.