முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ரசல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,கேரளா, தமிழகம், மத்திய அரசு சார்ந்த உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும் அதேபோல் 2 மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.