கடந்த டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை உயர்வு! கார் விற்பனை சரிவு….
இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2016 டிசம்பரில் 2,27,823 வாகனங்கள் விற்பனையான நிலையில், 5.22 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
கார்களின் விற்பனையை பொறுத்தவரை 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிட்டால் கடந்த டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் 1,58,617 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த டிசம்பரில் 1,58,326 கார்கள் விற்பனையாகியுள்ளன.
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, 2016 டிசம்பரை ஒப்பிடுகையில் 41.45 சதவீதம் அதகிரித்து, 12,87,592 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுபோலவே சரக்கு வாகனங்கள் விற்பனையும் கடந்த டிசம்பரில் 52.62 சதவீதம் அதிகரித்துள்ளது.
source: dinasuvadu.com