M.G.R.மகனாக களமிறங்கிய சசிகுமார்! சீமராஜா படத்தை அடுத்து பொன்ராம் இயக்க உள்ள புதிய பட அப்டேட்ஸ்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்க ஒரு வருடம் காத்திருந்தால் தான் நடைபெறும். ஏனென்றால் விஜய் சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கிடையில் தற்போது சசிகுமாரிடம் ஒரு கதையைக் கூறி அதற்கான பூஜையும் போட்டு படஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் இயக்குனர் பொன்ராம்.
இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும் நாயகியாக மிருளானியும் நடிக்க உள்ளனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தான் எம்.ஜி.ஆர்.மகன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.