தமிழகம் திரும்பினார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

Default Image

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்  கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி  3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன்
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதனிடையே நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
அவரைப் பிடிக்க கொல்கத்தா போலீஸார் தமிழகத்தில் முகாமிட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர், கர்ணன் கடந்த ஜூன் மாதம் கோவையில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவர் 6 மாத சிறை தண்டனை முடிந்து டிசம்பர் 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் கொல்கத்தா நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை முடித்து இன்று (வியாழக்கிழமை) தமிழகம் திரும்பினார்.
கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி  3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்