“பிகில்” விழா சர்ச்சை: நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு..!
சமீபத்தில் பிகில் திரைப்பட இசை வெளியிட்டு விழா தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்த விழாவில் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய்க்கு கே.எஸ் அழகிரி ஆதரவு தெரிவித்து உள்ளார். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்து கொண்டார் என கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
மேலும் அழகிரி கூறுகையில் ,நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சி சாராதவர். லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்ட இளம் கலைஞர் விஜய் .நடிகர் விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.
எனவே கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.