விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் #AIADMK pic.twitter.com/71VJL0lOVc
— O Panneerselvam (@OfficeOfOPS) September 25, 2019
இந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு 28 மாவட்ட நிர்வாகிகளும், நாங்குநேரி தொகுதிக்கு 27 மாவட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.