பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் விபத்து ! உயிர் தப்பிய விமானிகள்
மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.அப்போது எதிர்பாரத விதமாக விமானத்தில் கோளாறு ஏற்ப்பட்டது.இதனால் விமானத்தில் இருந்த 2 விமானிகள் இயக்குவதற்கு முயற்சி செய்தனர்.ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.விமானத்தில் இருந்த விமானிகள் பத்திரமாக தரையிறங்கினர்.