சம்பள விஷயத்தில் கரெக்ட்டா இருக்கணும் : நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைக்க தயாராக இருப்பதாகவும், எவ்வளவு சம்பளம் தர முடியும் முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விட வேண்டும் என்றும், பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் ஏற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சொல்லிய சம்பளத்தை தர மறுத்ததால், அது எனக்கு பிடிக்காத விஷயம். அவர்கள் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும் என்றும், இதை வைத்து சம்பள விஷயத்தில் கெடுபிடியாக இருக்கிறேன் என்றும் விமர்சித்தால் கவலைப்பட மாட்டேன்.’ என்றும் கூறியுள்ளார்.