இதனால தான் நான் அஜித் படத்துல நடிக்கல! பிரபல நடிகை ஓபன் டாக்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.
இந்நிலையில், வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்க , முதலில் ஊர்வசி ரௌடிலாவை தான், போனி கபூர் அழைத்ததாக ஒரு பேட்டியில் ஊர்வசி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் போனிகபூருடன் இணைந்து, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால், அந்த சமயத்தில் நான் வேறு சில படங்களில் பணியாற்றி கொண்டிருந்ததால், இந்த படத்தில் நடிக்க என்னால் தேதி கொடுக்க இயலவில்லை. இதனால் தான் அஜித்துடன் நடிக்க இயலாமல் போய்விட்டது.’ என கூறியுள்ளார்.