க்ரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன! ஆய்வு கூறும் அறிக்கை !
கிரீன் டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது உடலில் பலவகையான நன்மைகளை கொடுக்கிறது. உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் இந்த கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் பல கூறுகிறது.
கீரின் டீ குடிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
உடல் எடை குறைப்பு :
உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் நாம் கிரீன் டீ குடிப்பதால் அது நமது உடலில் உள்ள கொழுப்புகளை 20 சதவீதம் குறைத்து உடல் பருமனை குறைகிறது.மேலும் கிரீன் டீ தினமும் குடித்து வந்தால் நமது உடலின் எடை மற்றும் குடல் வீக்கம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
நீரழிவு :
கிரீன் டீயை நாம் தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் இன்சுலின் அளவு சீராக இருக்கும்.
சருமம் மற்றும் இதயம் :
சருமம் மற்றும் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன் டீயை நாம் தினமும் குடித்து வர அது நமது சருமத்தையும் இதயத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.