விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று விருப்பமனு தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுகவில் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராக 3 முறை பதவி வகித்தவர் புகழேந்தி.