ஆதார் – லைசன்ஸ் – வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் இனி ஒரே அட்டையில்… விரைவில்…
டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனுக்கான கட்டடம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ உலக மக்கள் தொகையில் இந்தியாவில் மக்கள் தொகை அளவு 17.5 சதவீதமாகும், ஆனால், பரப்பளவில் உலகளவில், இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். என கூறினார்.
மேலும், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் ஒரே கார்ட்டாக ஏன் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பினார். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் எல்லாம் சரியாக இருப்பது மிகவும் முக்கியம் என கூறினார்.