திமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது.
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று விருப்பமனு தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் தொடங்கியுள்ளது.முதலில் 13 பேரிடம் நேர்காணல் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.