ஷேன் வார்ன் ஒரு வருடம் வாகனம் ஓட்ட தடை ..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்.தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.இவர் கடந்த ஆண்டு வாகனம் ஓட்டும் போது குறிப்பிட்ட வேகத்தை விட்ட அதிக வேகத்தில் வாகனத்தை ஒட்டி சென்று உள்ளார்.
அதனால் போலீசாரிடம் சிக்கினார்.இது தொடர்பாக வழக்கு லண்டனில் உள்ள விம்பிள்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஷேன் வார்ன் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வேக கட்டுப்பட்டு விதியை 6 முறை மீறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியாக ஷேன் வார்ன் 12 மாதம் அதாவது 1 வருடம் வாகனம் ஓட்ட தடை செய்து உள்ளது.மேலும் அபராதமும் நீதிமன்றம் விதித்து உள்ளது.