மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு !வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…
வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதையடுத்து மத்திய அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது .
ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்ட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஜனவரி 20-ம் தேதி முதல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்ட இருப்பதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்கி சேவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இலவச சேவையை நிறுத்தும் திட்டமில்லை என்று கூறியுள்ள வங்கிகள் கூட்டமைப்பு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com