சூப்பர் ஸ்டாருக்காக கதை எழுதி வரும் கௌதம் வாசுதேவ் மேனன்!

சில வருடங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் பிஸியான இயக்குனராக தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார். அவர் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது. அதனை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியல் குயின் தயாராகிவிட்டது.
இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் தற்போது புதிய தகவலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்க்காக கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு கதை எழுதி வருகிறாராம். விரைவில், அந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூற உள்ளாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அதற்கடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025