கணவன் வேலைக்கு போகாததால் பிறந்த 20 நாளில் இரட்டை குழந்தையை குளத்தில் வீசிய தாய் …!
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சார்ந்தவர் நசிமா.இவரது கணவர் வசீம்.இவர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. நசிமா கணவர் வசீம் வேலைக்கு போகாமல் இருந்து வந்து உள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.மேலும் வசீம் வேலைக்கு போகாமல் இப்படியே இருந்தால் குழந்தைகளை இப்படி காப்பாற்ற முடியும் என்ற சந்தேகம் நசிமாவிற்கு எழுந்து உள்ளது.
இதை தொடர்ந்து நசிமா தங்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் குழந்தைகளை வீச முடிவு செய்து உள்ளனர்.அதன் படி பிறந்து 20 நாள்களே ஆன இரட்டை குழந்தைகளை நசிமா குளத்தில் வீசிவிட்டு கிராமத்தில் உள்ளவர்களிடம் தன் குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
பின்னர் கணவர் ,மனைவி இருவரும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.இறுதியாக நசிமாவிடமும் அவரது கணவரிடமும் விசாரணையை போலீசார் நடத்தினர்.விசாரணையில் குழந்தைகளை குளத்தில் போட்டதை நசிமா ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து குளத்தில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு குழந்தைகளின் உடலை போலீசார் கைப்பற்றினர்.மேலும் இந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.