நாட்டுவெடிகுண்டு வீசி முக்கிய அரசியல் பிரமுகர் கொடூர கொலை!
புதுசேரியில் அரசியல் பிரமுகர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியம் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாகியுள்ளது.
புதுச்சேரி, காலாபேட்டையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் சந்திரசேகர் என்பவரை ஒரு கும்பல் நாட்டு வெடுக்குண்டு கொண்டு தாக்கியுள்ளனர். அதில் சாகவில்லை என்பதால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை கொடூரமாக கொன்றுவிட்டனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியவிட்டது.