நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ! இன்று வேட்புமனு தாக்கல்  தொடக்கம்

Default Image

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கான வேட்புமனு தாக்கல்  இன்று தொடங்கியது.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இதனால்  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ராதாமணி ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எனவே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தது.தற்போது தமிழக  சட்டப்பேரவை செயலர் விக்கிரவாண்டி தொகுதிகாலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கான வேட்புமனு தாக்கல்  இன்று தொடங்கியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்