மணமணக்கும் பலா பிஞ்சி பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?
உடலுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் பலா பிஞ்சி பொடி மாஸ் ஒன்றும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடி மாஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பலா பிஞ்சி -2 கப்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
தண்ணீர் -தேவையான அளவு
வெங்காயம் -2
பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் -1
கடுகு -1/4 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பலா பிஞ்சி, மஞ்சள் தூள் , உப்பு என அனைத்தையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடித்து மிக்சியில் போட்டு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு, வெங்காய,ம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ,மஞ்சள் தூள் ,உப்பு போட்டு வதக்கி அரைத்த வைத்த பலா பிஞ்சி விழுதையும் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.இப்போது சுவையான பலா பிஞ்சி பொடிமாஸ் தயார்.