விஜய் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்-அமைச்சர் காமராஜ்
விஜய் நெஞ்சில் ஈரம் இல்லாதவர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார் .விஜய் இவ்வாறு பேசியது குறித்து அதிமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட விளம்பரத்திற்காக நடிகர் விஜய் அதிமுக அரசை விமர்சித்து வருகிறார் என்றும் நெஞ்சில் ஈரம் இல்லாதவர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.