ஆய்வில் அதிர்ச்சி தகவல் !வீட்டில் இருந்து பகுதிநேரப் பணியாற்றுபவர்களுக்கு வளர்ச்சி குறித்து ?
பேபால் நிறுவனம் வீட்டில் இருந்து பகுதிநேரப் பணியாற்றும் ஐந்நூறு பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. வலைத்தளம், செல்பேசி செயலி, வலைத்தள வடிவமைப்பு, இணைய ஆராய்ச்சி, தகவல் பதிவு, கணக்குப் பதிவு, கணிப்பொறி வரைகலை ஆகிய துறைகளில் பெரும்பாலானோர் பணியாற்றுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 41விழுக்காட்டினர் கடந்த ஓராண்டில் மிக விரைவான வளர்ச்சியடைந்துள்ளதும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அதிகப் பணி கிடைப்பதும் தெரியவந்துள்ளது. குறித்த நேரத்தில் பாதுகாப்பான முறையில் ஊதியம் கிடைப்பதே இந்தத் துறையைப் பலரும் நாடிவருவதற்குக் காரணமாகும். நண்பர்கள், குடும்பத்தினர், சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலமே பணி இருப்பதைத் தெரிந்துகொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
source: dinasuvadu.com