இது தான் கடைசி சர்வதேச போட்டி !அதிலும் சாதனையுடன் விடைபெற்ற ஜாம்பவான்

Default Image

தனது கடைசி டி-20 போட்டியில் 71 ரன்கள் அடித்ததன் மூலமாக ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா சாதனை படைத்துள்ளார்.

வங்க தேசத்தில் முத்தரப்பு டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் வங்கதேசம் ,ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாவே அணிகள் விளையாடி வருகின்றது.

இதுவரை நடைபெற்ற போட்டியில் பெற்ற வெற்றிகளை வைத்து வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த முத்தரப்பு தொடரோடு ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் ஜிம்பாவே அணி மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்தது.ஆப்கான் அணியில்  அதிகபட்சமாக குர்பாஸ் 61 ரன்கள் அடித்தார்.ஜிம்பாவே அணியின் பந்துவீச்சில் கிறிஸ்டோபர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பின்னர் களமிறங்கிய ஜிம்பாவே அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

ஆனால் இந்த போட்டியுடன் ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா  71(42) ரன்கள் அடித்தார்.இவர் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது தனது இறுதி டி-20 போட்டியில்  விளையாடும் ஒரு வீரர்  அடித்த அதிகபட்ச ரன் 71 ரன் தான்.அதுவும் மசகட்ஸா  27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.தனது இறுதிப்போட்டியில் வெற்றியுடன் சென்றுள்ளார் மசகட்ஸா  .மேலும் தொடர்ச்சியாக டி-20  போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ஆப்கான் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஜிம்பாவே அணி.

சர்வதேச போட்டிகளில்  ஹாமில்டன் மசகட்ஸாவின்  பங்களிப்பு: 

டெஸ்ட் போட்டிகள்    : 38          ரன்கள்: 2223        சதம் :         அரைசதம் : 8

ஒருநாள் போட்டிகள்  : 209        ரன்கள்: 5658       சதம் :         அரைசதம் : 34

டி-20 போட்டிகள்          : 66         ரன்கள்: 1662        சதம் : –          அரைசதம் : 11

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்