வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகும் எண்ணிக்கை! இந்த விஷயத்தில் முதலிடம் இந்தியாவுக்குதான்!
இந்தியாவில் அதிமாக படித்தும், அல்லது இங்கு வேலை எதுவும் இல்லை ஆனால் உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பெரும்பாலான தேர்வு வெளிநாடு செல்வதாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் அதற்கான வேலைவாய்ப்புகளை அரசு அமைத்து தரவில்லை என கூறப்பட்டாலும் மக்களிடையே வெளிநாட்டு மோகம் குறைந்தபாடில்லை.
தற்போது, தனது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதுவரை இந்தியாவில் இருந்து வேலைக்கு வெளிநாடு சென்றவர்கள் 1 கோடியே 75 லட்சம் பேர் சென்றுள்ளனர். சென்றவருடம் 1.59 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் மெக்சிகோ உள்ளது. அங்கு இந்த வருட கணக்கின்படி, 1 கோடியே 20 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். 3ஆம் இடத்தில் சீனா. இங்கு 1 கோடியே 10 லட்சம் பேர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர்.
அதேபோல இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது, இந்தாண்டு 51 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. இதே எண்ணிக்கை 2015 ஆண்டு 52 லட்சத்து 40 ஆயிரம் பேராக இருந்துள்ளது.