விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக களமிறங்கும் மான்ஸ்டர் பட நடிகை!

நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.. இவர் தமிழில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் செல்லா அய்யாவு, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. விஷ்ணு விஷால் தற்போது ஜெர்சி தமிழ் ரீமேக் மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிற நிலையில், இந்த படத்தினை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025