துபாயில் இருந்து வாட்ஸ் அப்பில் முத்தலாக்…! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!
இஸ்லாமிய மதத்தில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என கூறி தனது மனைவியை விவகாரத்து செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியதால் கடந்த ஜூலை மாதம் இந்த நடைமுறை இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட்டு இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தடையை மீறி முத்தலாக் கூறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது 40 . இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் அவ்வப்போது வந்து தனது மனைவியை பார்த்து விட்டு மீண்டும் துபாய் சென்று விடுவார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அப்பெண் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.கடந்த ஜனவரி மாதம் இவரின் கணவர் மீண்டும் துபாய் சென்று உள்ளார்.
இருவரும் வாட்ஸ்ஆப் மற்றும் போனிலும் அடிக்கடி பேசி வந்து உள்ளனர்.இடையில் குடும்ப பிரச்சனைகள் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.இதனால் அப்பெண்ணின் கணவர் துபாயில் இருந்து கொண்டே வாட்ஸ்ஆப் மூலம் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் தன் கணவர்மீது தற்போது புகார் கொடுத்து உள்ளார். புதிய முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் அவர் கணவர் மீது காவல் துறைவழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும் அப்பெண்ணின் கணவரின் பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றன.