சாம்பியன் படத்தில் பார்வையிழந்த இளைஞனுக்கு வாய்ப்பு கொடுத்த சுசீந்திரன் !

இயக்குநர் சுசீந்திரன் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல் படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.
இவர் அடுத்ததாக அறிமுக நடிகர் விஷ்வாவை வைத்து “சாம்பியன்” எனும் படத்தை எடுக்கிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மிருநாளினி மற்றும் சவுமியா நடிக்கிறார்கள்.
மேலும் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிகர் நரேன் நடித்துள்ளார். ஹீரோவின் அப்பாவாக இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்துள்ளார்.இந்த படத்தில் துப்பறிவாளன் , பிசாசு முதலிய படங்களுக்கு இசை அமைத்த அரோல் கரோலி இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் 19 வயதுடைய கார்த்திக் எனும் கண்தெரியாத இளைஞரை பின்னணி பாடகராக இயக்குநர் சுசீந்திரன் அறிமுக படுத்தியுள்ளார்.