ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை- தமிழக முதல்வர் அறிவிப்பு..!!

Default Image

 
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தின் நிலுவை தொகை கொடுக்க வேண்டுமென்பதும் ஒன்று. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விதி எண் சட்டப்படி 110ன் கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து, போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்