ஆயிரக்கணக்கான போலி செய்தி கணக்குகள் நீக்கம்! டிவிட்டர் நிர்வாகம் அதிரடி!
சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகள் அவ்வப்போது இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக, மத்திய அரசானது சமூக வலைதளங்களை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவை விரைவில் நிறுவ உள்ளது. சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வாறு விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது இல்லை எனவும் ஒரு கூற்று நிலவி வருகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் போலி கணக்குகள் மூலம் செய்திகள் வழங்கிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தற்போது டிவிட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மீறப்படுவதாகவும், பல போலி கணக்குகளிலிருந்து, செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் இருந்துள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு, தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.