நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதை யாரும் தடை விதிக்க முடியாது! இந்த முக்கிய சட்டம் பற்றி தெரியுமா?!
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஃபஹீமா ஷிரீன் என்பவர் அம்மாநில கலோரியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். இவர் படிக்கும் கலோரியின் விடுதியில் இவர் விதியை மீறி மொபைல் இன்டர்நெட் உபயோகப்படுத்தியதாக கூறி அவரை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கியாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து, கேரளா நீதிமன்றத்தில், இம்மாணவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாணவி சார்பாக வாதாடிய வக்கீல், கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல், இந்திய சட்டப்பிரிவு 19 (1) A யின் படி பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தினை பறிக்கும் செயல் எனவும், மாணவர்கள் அறிவை வளர்க்கவும் , கருத்துக்களை அனைவரும் தெரிவிக்கவும், இன்டர்நெட் அடிப்படை உரிமை என 2016ஆம் ஆண்டு ஐநா கூறியதையும் சுட்டி காட்டினார்.’
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, கேரளா சட்டமன்றத்தில், 2017ஆம் ஆண்டு நிதியமைச்சர் கூறுகையில் இணையதளம் பயன்படுத்துவதை அடிப்படை உரிமையக கொண்டு அனைவரும் இணையதள சேவை பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என கூறினார். ஆதலால் இணையதள சேவை பயன்படுத்துவது என்பது இந்திய சட்ட பிரிவு 21-ஆன தனி மனித உரிமை சட்டமாகும். அதேபோல பிரிவு 21-A என்பது கல்வி உரிமை சட்டம் என இரு பிரிவுகளின் கீழ் வருகிறது என தீர்ப்பளித்தார்.