அமேசான் கருவியில் கால்பதித்த ஹிந்தி மொழி! இவர்தான் முக்கிய காரணம்!
அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும், இதன் மூலம் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்த கருவியில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த கருவியில் இந்தி மொழி புகுத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ரோஹித் பிரசாத் என்பவரது முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.
இவர் அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜி முதுகலை படிப்பு படித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை அதிகமாகியுள்ளதை சுட்டிக்காட்டி, ஹிந்தி மொழியை உட்புகுத்தியுள்ளார்.